8:07 AM
உசிரே போகுதே : "இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே" என்று மெதுவாக கார்த்திக்கின் குரலில் ஆரம்பிக்கும் பாடல் அக்மார்க் பிளாக் தீம் வகையை சார்ந்தது. "உசிரே போகுதே உசிரே போகுதே. உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே" என்று கார்த்திக் உருகிப்பாடுவது நம்மையும் உருக வைக்கிறது.
குரலில் கசியும் ஏக்கத்தை கச்சிதமாக பதிவு செய்திருக்கிறார் ரஹ்மான். சரணங்களின் முடிவில் ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கும் ஹாம்மர் இசை அடுத்த நொடியே அடங்கிப்போவது அட்டகாசம். "அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி" என்ற வரிகளில் வைரமுத்து கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்.
ட்ரம்ஸ்'ஸின் அதிர்வுகள் ஏற்படுத்தும் உணர்வுகளை அனுபவித்தால் மட்டுமே புரியும். அலட்டிக்கொள்ளாமல் ஏதோ ஒரு பய உணர்வை ஏற்படுத்தும் வித்தையை ரஹ்மான் இந்த பாடலில் புரிந்திருக்கிறார்.உசிரே போகுதே : "இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே" என்று மெதுவாக கார்த்திக்கின் குரலில் ஆரம்பிக்கும் பாடல் அக்மார்க் பிளாக் தீம் வகையை சார்ந்தது. "உசிரே போகுதே உசிரே போகுதே. உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே" என்று கார்த்திக் உருகிப்பாடுவது நம்மையும் உருக வைக்கிறது.
குரலில் கசியும் ஏக்கத்தை கச்சிதமாக பதிவு செய்திருக்கிறார் ரஹ்மான். சரணங்களின் முடிவில் ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கும் ஹாம்மர் இசை அடுத்த நொடியே அடங்கிப்போவது அட்டகாசம். "அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி" என்ற வரிகளில் வைரமுத்து கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்.
ட்ரம்ஸ்'ஸின் அதிர்வுகள் ஏற்படுத்தும் உணர்வுகளை அனுபவித்தால் மட்டுமே புரியும். அலட்டிக்கொள்ளாமல் ஏதோ ஒரு பய உணர்வை ஏற்படுத்தும் வித்தையை ரஹ்மான் இந்த பாடலில் புரிந்திருக்கிறார்.
நியாய தராசில் - ராவணன்

உலக அரங்கில் பேசப்படும் இயக்குனர் மணிரத்னம் இயக்கதில் 'ராவணன்'. தமிழ் ரசிகர்களை முழுக்க முழுக்க ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கும் படம் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இருக்க முடியாது. இது படம் பார்த்த அனைவருக்கும் தெளிவாவே விளங்கியிருக்கும். அப்படி என்ன ஏமாற்றம்? தமிழுக்கு நியாயம் செய்வதை விட இந்திக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் மணி. இது இராமாயணம் அல்ல, ராவணன் என்பது அந்தக் கதாப்பாத்திரத்தின் புனைபெயர் என்று தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார் இயக்குனர்.
வீரா என்கிற வீரய்யனாக விக்ரம். வீரா, ஊர் மக்களைப் பொருத்த அளவில் அவன் காவல் தெய்வம். சட்டத்தின் பார்வையில் தீவிரவாதி. அதனால் அதிரடிப்படை அவனைத் தேடி வருகிறது. ஆனால் வீரா தீவிரவாதி என்று சொல்லப்படுவதற்கு ஒரு நியாயமான காரணம் கூட திரையில் காட்சியாக வரவில்லை. டி.ஜி.பி தேவின் மனைவியை (மனைவி ராகினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன்) வீரா கடத்தி சென்ற பிறகே வீரா குற்றவாளியாக கருதப்படுகிறான். அந்தக் குற்றத்திற்காகத் தான் சட சடவென குண்டுகள் தெரிக்க வீராவை சுட்டுத் தள்ளுகிறார் தேவ். அப்படியானால் வீரா முதலில் தேடப்பட்டு வருவதற்கான காரணம்???
படத்தில் காட்டப்படும் மலைப் பகுதிகள் திருநெல்வேலியை சார்ந்தவை என சொல்லப்படுகிறது. ஆனால், அம்மக்கள் எதை சார்ந்தவர்கள், அவர்கள் கலாச்சாரம், அவர்கள் வாழ்க்கை முறை எதுவுமே படத்தில் காட்சியாக காட்டப்படவில்லை. அவர்கள் பிரச்சனை தான் என்ன? வீராவை எதற்காக அவர்கள் நம்புகிறார்கள், எதுவுமே படத்தில் இல்லை.
வீராவின் தங்கை வெண்ணிலாவாக ப்ரியாமணி. ஃப்லாஷ் பேக்கில் வரும் ப்ரியாமணிக்கு அரண்மனையில் திருமணம் நடக்கிறது. என்னடா இது? சரி அதை விடுங்கள், திருமணத்தின் போது வீட்டுக்குள் அரவாணிகளின் ஆட்டம். தமிழ் நாட்டில் இப்படி ஒரு திருமணமா? இது போன்ற காட்சிகளில் மிகவும் தெளிவாகவே புரிகிறது... தமிழ் ராவணன் இந்தி ராவணின் போட்டோ காப்பி என்று!
வீராவாக வரும் ராவணன், தான் ஒரு ’எச்சக்கை’ என்று தானே சொல்கிறான். தன்னைத் தானே அவன் அப்படி இகழக் காரணம்? காவல் தெய்வமாக கருதப்படும் வீரா ’எச்சக்கையா’? அதுவும் அதை அவன் வாயாலேயே சொல்வதா? இராமாயணத்தில் இராவணன் தன்னைத் தானே இகழ்ந்துகொண்டதாக எதுவும் இல்லையே. ஒரு காட்சியில் உடைந்துபோன கடவுள் சிலை காண்பிக்கப்படுகிறது. அந்தக் கடவுளிடம் சென்று காப்பாற்றும்படி கேட்கிறாள் ராகினி. அப்போது தன் கணவனைப் பற்றி வீராவிடம் சொல்லும் ராகினி. தன் கணவன் ஒரு கடவுள் மாதிரி என்று சொல்ல, உடனே வீரா மிகவும் ஆக்ரோஷமான குரலில், கடவுளா? நான் பிசாசு, அனைத்தையும் விடப் பெரியவன் என்று கத்துகிறான்.அப்படியானல் கடவுளை எதிர்க்கிறவனா இராவணன். அப்படியானால் இராவணன் சிவபெருமான் பக்தன் என்பதும் அவன் பல பூஜைகளை ஆதரித்தவன் என்பதும் மணிரத்தினதிற்கு தெரியாமல் போனதா??
இப்படிப் பல கேள்விகள் இருந்தாலும், இவை அனைத்தும் சினிமாவிற்கான சமரசங்கள் என்று எடுத்துக் கொள்வோம். டெக்னிகல் விஷயத்திற்கு வருவோம். இராவணன் படத்தைப் பொருத்த அளவில் பல ’செட்டு’கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் ’செட்டு’தான் என்று பார்க்கும் ரசிகனுக்கு நன்றாகவே தெரியும். இதுவே படத்தின் முதல் பலவீனம். படத்தில் இயல்பு தொலைந்து, வண்ணம் பூசப்பட்ட அட்டை சுவருகளாய் காணப்படுகிறது.
ஒவ்வொரு ஃப்ரேமிலும் சத்தமாகவோ, மௌனமாகவோ எதையோ ஒன்றை செய்துகொண்டு இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். விக்ரம் மலைமேல் இருந்து சரிந்து விழும்போது துவங்கும் ’உசுரே போகுது’ பாடல்... மெய் சிலிர்க்குது. ஆனால், ’காட்டு சிரிக்கி’ போன்ற பாடல்கள் வீணடிக்கப்படிருப்பதே இங்கு வேதனை. அதில் மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்! கூடவே வைரமுத்துவின் வரிகளும் ஓரம் கட்டப்பட்டுவிட்டன.
சுஹாசினி மணிரத்னத்தின் வசனங்கள், சில காட்சிகளில் சாதாரண தமிழில் இருக்கிறது, அடுத்தக் காட்சியில் வட்டார வழக்காக மாறிவிடுகிறது. சில வசனங்கள் புரிந்தாலும் அது எதற்காக வருகிறது என்பது புரியவில்லை.
படத்தின் காட்சிக் கோர்ப்புகள் கத்தரி போட்ட கதர் துணி மாதிரி சிதறிக்கிடந்தன. பிரபு, ப்ரியாமணி, கார்த்திக், ஏன் விக்ரம், ஐஸ்வர்யா ராய் அனைவரின் கதாப்பாத்திர படைப்பிலும் ஒரு அழுத்தமான பதிவு இல்லாமல் போனது என்பதே உண்மை. இந்த நடிகர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது என்பதே இதில் இன்னொரு உண்மை. ராவணன் படத்தின் மூலம் விக்ரமிற்கு கிடைத்த ஒரே பலன் இந்திக்கு ஒரு எண்ட்ரி மட்டுமே. ஆனால், இவை அனைத்தையும் சரிசெய்யும் வகையில் சந்தோஷ் சிவன் - மணிகண்டன் கேமரா வித்தைகள். கேமரா வித்தைகளுக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.
இராவணன் இறக்கும் போது வரும் பாடல் இது, நான் வருவேன்... மீண்டும் வருவேன்... உனை நான் தொடர்வேன், உயிரால் தொடுவேன்... இதற்கான அர்தத்தை மணி அடுத்த படத்தில் சொல்வாரோ!
இராவணனின் மைனஸ்:
கதாப்பாத்திர படைப்பு, காட்சிக் கோர்ப்புகள், வீணடிக்கப்பட்ட விக்ரமின் மெனக்கெடல், கலை,
இராவணனின் ப்ளஸ்:
கேமரா வித்தைகள்
“ராமாயணம்” விஞ்ஞான யுகத்தில் நடப்பது மாதிரியான கதை...
கட்டப் பஞ்சாயத்துக்கள் நடத்தி ஊரையே கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் விக்ரம். ஒரே தங்கை பிரியாமணி உயர் சாதி இளைஞனை காதலிக்கிறார். இரு குடும்ப சம்மதத்துடன் திருமணம் நடக்கையில் மண மேடையில் அசம்பாவிதம். என் கவுண்டர் போலீஸ் சூப்பிரண்டு பிருதிவிராஜ் மண்டபத்தில் புகுந்து விக்ரமை சுடுகிறார். பிரியாமணியை போலீசார் இழுத்து சென்று கற்பழிக்கின்றனர். அவமானத்தில் அவர் தற்கொலை செய்கிறார்.
பழிதீர்க்க பிருதிவிராஜ் மனைவி ஐஸ்வர்ராயை விக்ரம் கடத்தி காட்டுக்குள் வைக்கிறார். அவரை மீட்க போலீஸ் படையுடன் பிருதிவிராஜ் காட்டில் நுழைகிறார். அங்கு இருவருக்கும் நடக்கும் யுத்தமும் ஐஸ்வர்யாராய் மீட்கப்பட்டாரா என்பதும் கிளைமாக்ஸ்.
முரட்டுத்தனமாக இருவருக்குள் நடக்கும் மோதலில் கவித்துவமான காதலை வைத்து இதயங்களை கனக்க செய்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
போலீசாரை விக்ரம் உயிரோடு எரித்து கொல்வது போல் எதிர்பார்ப்போடு கதை ஆரம்பிக்கிறது. படகில் செல்லும் ஐஸ்வர்யாராயை கடத்தியதும் சூடு பிடிக்கிறது. பிறகு போலீஸ் சேசிங் சண்டை என நீள்கிறது.
கட்டுமஸ்தான முரடனுக்குள் விக்ரம் வாழ்கிறார். டப டப வென்ற கூச்சலுடன் மண்டையில் அடித்து எதிரிகளை ஆவேசமாக துவம்சம் செய்கையிலும் ஐஸ்வர்யாராயை கை கால்கள் கட்டி இம்சிப்பதிலும் அசல் ராவணனாகவே தெரிகிறார். ஐஸ்வர்யாராயை சுட்டுக் கொல்ல துணிவது திக்.
ஐஸ் அழகில் கிறங்குவது அவரை தொடாமலேயே ரசிப்பது அழுத்தமானவை. காட்டில் என்னுடனேயே இருந்து விடுகிறாயா என கேட்கும் ஏக்கமும் பிருதிவிராஜ் மேல் காட்டும் பொறாமையும் நடிப்பில் உச்சம் தொடுபவை...
சந்தேகித்த கணவனை உதறி விட்டு ஐஸ்வர்யாராய் காட்டுக்குள் திரும்பி வந்ததை பார்த்து உருகுவதில் உயிரைத் தொடுகிறார். அப்போது இருவருக்கும் நடக்கும் வசன உரையாடல் ஜீவன். தொங்கு பாலத்தில் பிருதிவிராஜுடன் மோதும் சண்டை காட்சி சீட் நுணிக்கு இழுக்கிறது.
ஐஸ்வர்யாராய், அழகிலும் விக்ரமுடன் போட்டி போடும் நடிப்பிலும் ஜொலிக்கிறார். மழையில் சகதி காட்டில் எதிரிகளிடம் சிக்கி ஜீவமரண போராட்டம் நடத்துகிறார். குழிகள், குகைகள் சறுக்கு பாறைகளில் ஏறி இறங்கி நிறைய மெனக்கட்டுள்ளார். கணவன் சந்தேகத்தில் உடைவதும் விக்ரமுக்குள் ராமன் இருப்பதை உணர்ந்து காப்பாற்ற துடிப்பதும் வலுவானவை..
பிருதிவிராஜ் மிடுக்கான வில்லன் போலீஸ். விக்ரம் அண்ணனாக பிரபு, தங்கையாக பிரியாமணி, தம்பியாக முன்னா வலுவான கேரக்டர்கள். வன ஊழியராக வரும் கார்த்திக் கலகலப்பு.... ராசாத்தி என்ற அரவாணியாக வையாபுரி வருகிறார்.
ஏ.ஆர். ரகுமான் இசையும், வைரமுத்துவின் பாடல் வரிகளும் நீர் வீழ்ச்சி, பசுமைகளை அள்ளி கண்களில்அப்பும் சந்தோஷ் சிவன், மணிகண்டன் ஒளிப்பதிவும் தூக்கி நிறுத்துகின்றன.
விக்ரமின் கட்ட பஞ்சாயத்துகளும் அங்கு வசிக்கும் மக்களும் வட இந்திய சாயலில் தமிழுக்கு அன்னியப்படுகின்றனர். ஆரம்ப சீன்கள் பிரமாண்டத்துக்குள் மெதுவாய் நகர்கிறது. ஆனாலும் இடைவேளைக்கு பிறகு வரும் விறு விறுப்பும் முத்திரை பதிக்கும் கிளைமாக்சும் குறைகளை மறக்கடிக்க செய்கின்றன. மணிரத்னம் கட்டிய வலுவான ராவண ராஜ்ஜியம்.
Tags: ravanan prithviraj, prithviraj in ravanan, prithviraj raavan hindi film, prithviraj hindi movie raavan, prithviraj raavan stills, raavanan prithviraj movie photos, ravanan prithviraj pictures, prithviraj mani ratnam raavanan movie, prithviraj priyamani ravanan stills, prithviraj aishwarya rai images, ash prithviraj photos






Vikram Ravan photos,Vikram, Ravan pictures,Vikram Raavanan wallpapers,Vikram Ravan stills,Vikram Ravan pictures,Vikram Ravan images,Vikram Raavanan pics,Vikram raavan gallery,Vikram photos,Raavanan wallpapers
raavanan Music songs audio release ,songs free download download mp3
raavanan Music download mp3
Click The Song Name to Download
1. Veera VeeraVijay Prakash, Mustafa Kutoane, Keerthi Sagathia, A. R. Rahman
2. Usire PoghudeyKarthik, Mohammed Irfan
3. Kodu PottaBenny Dayal
4. Kaatu SirukkiShankar Mahadevan, Anuradha Sriram
5. KalvareShreya Ghoshal
6. Keda KariA. R. Reihana, Tanvi Shah, Benny Dayal, Bhagyaraj
raavanan Music, download mp3,music download,ravan tamil movie,manirathnam movie,aiswarya rai new movie ravaanan tamil movie,hindi movie,abishek bachan ravanan music mp3 songs download,ravanan music shreya ghosal song,.song mp3 files of ravanan tamil hindi movies.manirathanam movie.