|
|
|
இதை வச்சும் தேடலாம்
என்னைப் பத்தி ஹி...
- மணிபாரதி
- சென்னை, தமிழ்நாடு, India
- என்னை பத்தி நானே என்னன்னு சொல்றது??? நீங்க தான் சொல்லணும் நம்ம அருமை பெருமையெல்லாம்!!!
நிறுத்தக் குறியீடுகள் (Punctuation Marks) 0
10:46 PM
இங்கே இணைக்கப் பட்டிருக்கும் நிழல் படத்தின்; ஓலைச் சுவடிகளில் என்ன எழுதப் பட்டிருக்கின்றது என்பதை உங்களால் வாசித்து அறிய முடியுமா?"நிச்சயம் முடியாது." என்பதுதான் பதிலாக இருக்க முடியும். (நீங்கள் ஒரு பழந்தமிழ் மொழி ஆய்வாளராக இருந்தால் சிலவேளை சாத்தியமாகலாம்.)
ஆம்! செம்மொழியாகிய எம்மொழி சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இப்படித்தான் எழுதப்பட்டுள்ளது.
அதாவது ஒரு வாக்கியம் வினா வாக்கியமா அல்லது வியப்பு வாக்கியமா என்பதையெல்லாம் வாசித்து உணர்ந்துக் கொள்வதற்கான கேள்விக்குறி, வியப்புக்குறி போன்றவை எம்மொழியில் இருக்கவில்லை.
வாக்கியத்தின் இடையே பயன்படும் காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி, மேற்கோள் குறிகள் போன்றனவும் இருக்கவில்லை. ஆக இன்று நாம் பயன்படுத்தும் நிறுத்தக் குறியீடுகளே எமது மொழியில் இருக்கவில்லை.
இன்னும் சொல்வதானால் சொற்களின் இடையே இடைவெளியிட்டு எழுதும் வழக்கும் எம்மொழியில் இருந்ததில்லை.
ஆனால் இன்று இவை எல்லாமே எமது பயன்பாட்டில் உள்ளன. இவை எப்படி எமது பயன்பாட்டிற்கு வந்தன என்றால்; ஆங்கில மொழியின் ஊடாகவே எமது பயன்பாட்டிற்கு வந்தவைகளாகும். இன்று நாம் மட்டுமன்றி உலகில் அனைத்து மொழியினரும் இவற்றின் பயன் உணர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
ஆம்! நிறுத்தக் குறியீடுகள் ( . , ; ; ' ? " " ! ' ' - _ / \ & # * ( ) [ ] { } < > ) என்பன; நாம் பேசும் பேச்சின் பொருளின் தன்மையை கேட்போர் எளிதாக விளங்கிக்கொள்ளவும், பேச்சின் ஊடாக உணர்வுகளை உணர்த்தவும், எமது பேச்சின் ஏற்ற இறக்க ஒலிப்புகளை; எழுத்து வடிவில் எழுதிடவும், வாசிப்போர் அதனை வாசித்து உணர்ந்திடவும் பயன்படும் இன்றியமையாதக் குறியீட்டு அடையாளங்கள் ஆகும். அதாவது ஒவ்வொரு வாக்கியத்தையும் தனித்தனியே பிரித்து அறிந்திடவும், வாக்கியத்தின் உற்பிரிவுகளை எளிதாக உணர்த்திடவும், வியப்பு, வினா போன்ற உணர்வுகளை எழுத்தில் காட்டிடவும் இவை உதவுகின்றன.
இந்த நிறுத்தக் குறியீடுகளை சரியாகப் பயன்படுத்தாது விட்டால் அவை; "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்பதுப் போன்று ஆகிவிடும். சிலவேளை முற்றிலும் தவறான பொருளைத் தந்துவிடும் அபாயமும் உள்ளது. எனவே நிறுத்தக் குறியீடுகளின் பயன்பாட்டை சரியாக அறிந்து பயன்படுத்தல் மிகவும் முக்கியமானது.
நிறுத்தக் குறியீடுகளின் வரலாற்றை இங்கே பார்க்கலாம்.
இனி இந்த நிறுத்தக் குறியீடுகளின் வகைகளின் பட்டியலைக் கீழே பார்ப்போம்.
| Punctuation Marks | நிறுத்தக் குறியீடுகள் | Symbols | |
| Full stop/Period | முற்றுப்புள்ளிaangilam.blogspot | . | |
| Colon | முக்காற்புள்ளி | : | |
| Semicolon | அரைப்புள்ளி | ; | |
| Comma | காற்புள்ளி | , | |
| Apostropheaangilam.blog | உடைமைக்குறி | ' | |
| Hyphen | இடைக்கோடு | - | |
| Dash (Long hyphen) | இடைக்கோடு | - | |
| Underscore | கிடைக்கோடு | _ | |
| Underline | அடிக்கோடு | ஆங்கிலம் | |
| Question Mark | கேள்விக்குறி | ? | |
| Exclamation Mark | வியப்புக்குறி | ! | |
| Forward slash | முன்சாய்கோடு | / | |
| Backslash | பின்சாய்கோடு | \ | |
| Double quotation marks | இரட்டைமேற்கோள் குறிகள் | " " | |
| Single quotation marks | ஒற்றை மேற்கோள் குறிகள் | ' ' | |
| Pound sign | நிறை நிறுத்தக்குறி | # | |
| Ampersand/and | இணைப்புக்குறி/உம்மைக்குறி | & | |
| Asterisk | நட்சத்திரக்குறி | * | |
| Ellipsis | தொக்கிக்குறி | . . . | |
| Brackets | அடைப்புக்குறிகள் | ( ) { } [ ] < > | |
இப்பதிவில் நிறுத்தக் குறியீடுகளின் பெயர்கள் மட்டுமே இடப்பட்டுள்ளன. இவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை எதிர்வரும் பாடங்களில் விரிவாகப் பார்ப்போம்.
நன்றி
அன்புடன்
மணிபாரதி
உலக மொழி கண்காணிப்பகம் (Global Language Monitor – GLM) என்பது; ஆங்கில மொழி சொற்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து, ஆங்கிலச் சொற்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு அறியத் தந்துக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனமாகும். அதன் கணிப்பின் படி; தற்போது ஒவ்வொரு 98 நிமிடங்களுக்கும் ஒரு புதிய ஆங்கிலச் சொல் உருவாகின்றதாம். அதாவது ஒரு நாளைக்கு 14.7 சொற்கள் ஆங்கிலத்தில் உருவாகின்றனவாம். (Currently this is a new word created every 98 minutes or 14.7 words per day.)2005 ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் 301,100 ஆங்கிலச் சொற்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனவாம். மற்றும் வழிச்சொற்கள், சொற்றொடர்கள் என எல்லாமாக மொத்தம் 616,500 சொற்கள் இடம் பெற்றிருந்தனவாம். இந்த எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுகதி வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது.
உலக மொழி கண்காணிப்பகம் பன்னாட்டளவில் பிரபலம் அடையும் சொற்கள்; அவை எம்மொழி சொற்களானாலும், அவற்றை ஆங்கிலச் சொற்களாக ஏற்றுக்கொள்கிறது. அதற்கான தகுதரமாக ஒரு சொல் உலகளவில் 25,000 ஆயிரம் தடவைக்கும் மேலாக குறிப்புகள், மேற்கோள்கள் உடன் பயன்பாட்டில் பரிச்சயம் அடைய வேண்டும். அவ்வாறு பரிச்சயம் அடையும் சொல்லிற்கான விளக்கங்களை வழங்கி, இலக்க வரிசையில் ஆங்கிலச் சொல்லாக ஏற்று அறிவித்து வருகின்றது.
அன்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சொற்கள்:
999,991: Sexting
999,992: Greenwashing
999,993: Octomom
999,994: Slow Food
999,995: Carbon Neutral
999,996: Cloud Computing
999,997: Slumdog
999,998: NOOb
999,999: Jai Ho!
ஹொலிவூட் (Hollywood) திரைப்படத் துறையூடாக பிரபலம் அடையும் சொற்களை ஹொலிவேட்ஸ் (Hollywords) என பட்டியலிட்டு வருகின்றது. அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட சொற்களே 'Slumdog, Jai Ho!' போன்றவைகளாகும்.
இணையப் பயன்பாட்டின் ஊடாக பயனர்களிடையே பிரபலம் அடையும் சொற்களைக் கண்காணித்து அவற்றையும் ஆங்கிலச் சொற்களாக ஏற்றுக்கொள்கிறது.
சாதனைத் தமிழர் ஆங்கிலச் சரித்திரத்தில்
-------------------------------------------------------------------------------------
தமிழ் இசை உலகில் ஒஸ்கார் விருது பெற்ற சாதனைத் தமிழர் ஏ. ஆர். ரஹ்மானின் பாடல் பன்னாட்டளவில் பிரசித்திப்பெற்றதால்; “ஜெய் ஹோ!” (Jai Ho!) எனும் சொல்லை, உலக மொழி கண்காணிப்பகம் 999,999 வது ஆங்கிலச் சொல்லாக ஏற்றுக்கொண்டுள்ளது.
அதனடிப்படையில் ஆங்கில மொழி சரித்திரத்திலும் ஏ. ஆர். ரஹ்மான் இடம் பிடித்து விட்டவர் ஆவார்.
999,999: Jai Ho!
'Jai Ho!' இச்சொற்றொடருக்கான பொருள்; வெற்றியின் மகிழ்ச்சியை ஆரவாரப்படுத்தும் ஒரு வியப்புச் சொற்றொடர் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. (The Hindi phrase signifying the joy of victory.)
ஆம்! 2009 ஜூன் 10 ஆம் நாள், GMT நேரப்படி முற்பகல் 10.22 க்கு, 1,000,000 இலட்சம் சொற்களை உள்ளடக்கிக்கொண்டது. (The English Language passed the Million Word threshold on June 10, 2009 at 10:22 a.m. (GMT). The Millionth Word was the controversial ‘Web 2.0′.)
அந்த பத்து இலட்சமாவது ஆங்கிலச் சொல்:
1,000,000: Web 2.0
'வலை 2.0' (Web 2.0) உலக விரிவு வலையின் அடுத்த தலைமுறையினருக்கான இணையப் பயன்பாட்டைக் குறிக்கும் ஒரு தொழில் நுட்பச் சொல்லாக அறிவித்துள்ளது. (Web 2.0 is a technical term meaning the next generation of World Wide Web products and services.)
இதோ அந்த உலக மொழி கண்காணிப்பகத்தின் தலமை அதிகாரியும் தலமை சொல் ஆய்வளருமான பவுல் ஜே. ஜே. பேயாக் (Paul J. J. Payack) அவர்களின் 1,000,000 இலட்சம் சொல்லின் பிரகடனப் பதிவும் காணொளியும்.
சரி! பத்து இலட்சத்து ஒன்றாவது ஆங்கிலச் சொல் எது என்று தெரியுமா?
1,000,001
'Financial Tsunami'
'சுனாமி' (Tsunami) எனும் சொல், ஒரு ஜப்பானிய மொழிச் சொல்லாகும். இச்சொல் அநேகமான தமிழர்களுக்கு கமலஹாசனின் 'அன்பே சிவம்' திரைப்படத்தின் பின்னரே அறிமுகமானச் சொல்லாக இருந்திருக்கும். அச்சொல்லையும் இன்று ஒரு ஆங்கிலச் சொல்லாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறே அன்மையில் 'Financial Tsunami' எனும் சொல்லும் 1,000,001 ஆம் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஒபாமா" (Obama) ஒரு புதிய ஆங்கிலச் சொல்
-------------------------------------------------------------------------------------
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் பெயர் உலகளவில் பிரபலம் அடைந்ததைத் தொடர்ந்து; கடந்த 2008 பெப்ரவரி 20 ஆம் நாள் "Obama" என்பதனையும் ஒரு புதிய ஆங்கிலச் சொல்லாக உலக மொழி கண்காணிப்பகம் அறிவித்தது. (GLM announced that the latest word to enter the English language was "obama") அத்துடன் "Obama" எனும் சொல்லை ஒரு வேர்சொல்லாகவும், அதனுடன் தொடர்புடையச் சொற்களை கிளைச்சொற்களாகவும் பட்டியலிட்டுள்ளது. அவைகளாவன:
Obama
Obamanomics
Obamican
Obamamentum
Obamacize
Obamarama
ObamaNation
Obamafy
Obamamania
Obamacam
இவ்வாறு ஆங்கிலம் இன்று உலகில் அதிகச் சொற்களைக் கொண்ட மொழியாக; பத்து இலட்சம் சொற்களுக்கும் அதிகமான சொற்களை உள்ளடக்கிக்கொண்டு, உலகப் பொது மொழியாக உயர்ந்து நிற்கின்றது. தற்போது உலக வரலாற்றில் ஒரு மில்லியன் சொற்களைக் கொண்ட ஒரே மொழி ஆங்கிலம் மட்டும் தான்.
சரி! இன்று இந்த நொடியில் ஆங்கிலத்தில் எத்தனை சொற்கள் பெருகியுள்ளன தெரியுமா?
ஆங்கில மொழி கடிகாரத்தில் இந்த வினாடி: 1,005,366 சொற்கள் பதிவாகியுள்ளன.
நன்றி
அன்புடன்
manibharathi
Spoken English Part -1
Spoken English Video Part -2
SAGA Chennai Spoken English Institute Free Video Training Clips.
Easy Spoken English Video Clips.
Spoken English Part -1
Spoken English Video Part -2
SAGA Chennai Spoken English Institute Free Video Training Clips.
Easy Spoken English Video Clips.
365 Days 24x7 Support : Support provided by Hosting Palace is one of the best in the web hosting industry in India.
Infrastructure : All our Web hosting plans, Reseller hosting plans are hosted in the world class Intel Core 2 Quad servers (8 Processors) with atleast 4GB of RAM and they are co-located at Premium Data Centers. All our Windows web hosting and Linux web hosting are are connected to the internet backbone of 70 Gbps from various top class upstream providers!
Reliability : We Provide an uptime guarantee of 99.9 % and you can be assured that signing up for a Linux Web Hosting Plans, Linux Reseller Hosting Plans is backed by 100% risk free 14 Days money back guarantee. In Coming days We are going to offer Cheap web hosting Server, Windows web hosting server, and Linux web hosting servers at affordable prices. Cheap Web Hosting, Cheap Reseller Hosting, Cheap Windows Hosting and Cheap Linux Hosting from Hosting Palace a Web Hosting Company from Chennai, INDIA.
Low Cost Domain Name Registration : Currently we are doing domain name registrations for Rs.449/- for .com, .net, .org, .biz, .info, .name, Rs.700/- for .in and all second level .in for Rs.350. Domain reseller will get discounted prices of Rs.420/-, Rs.700/- or and Rs.350/- respectively.
Quality Web Hosting India : Windows Hosting Plans, Linux Hosting Plans are best suited for Small Business Hosting, Personal Web Hosting and for Student Community.
Cheap Reseller Hosting India : Windows Reseller Hosting, Linux Reseller Hosting are best suited for (1) web hosting reseller (2) Web designers who are interested in offering web hosting services and want to build their own Linux or Windows web hosting company can choose from our Linux reseller hosting plans or Windows reseller hosting plans. Ready, Set, Go!..
Cpanel Web Hosting India : All our Linux Web Hosting and Linux Reseller Hosting comes with Cpanel Hosting Control panel the world's No.1 for Linux Web Hosting.
Affordable Web Designing India : We are having thousands of satisfied customers and hundreds of happy resellers. Several customers requested us to provide web designing services and hence we have started web designing services too. We highly recommend you to go through our Web Design Portfolio to see our compled web design projects.
Contact 24x7 Support : Manibharathi Mob : 09380083338
Followers
Feedjit
பிடித்ததில் படித்து !!!
ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு...
புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!
-அப்துல் கலாம்

2009 - 2010 WebIndiaToday.